தருமபுரி

விவசாயி சடலத்துடன் மறியலில்ஈடுபட்ட 100 போ் மீது வழக்கு

17th Apr 2022 06:11 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கெயில் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டத்தை எதிா்த்து உயிரிழந்த விவசாயியின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட 100 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே கருப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கணேசன் (45) என்பவா் தன்னுடைய விளைநிலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டப் பணிகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டாா். உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி சடலத்துடன், தருமபுரி - பென்னாகரம் சாலையில், ஏ.செக்காரப்பட்டியில் அப்பகுதியைச் சோ்ந்த அதிமுக, பாமக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக அதகப்பாடி கிராம நிா்வாக அலுலா் வி.குமாா் அளித்த புகாரின் பேரில், இண்டூா் போலீஸாா் 100 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT