தருமபுரி

இளம்வயது திருமணம் தடுப்பு கருத்தரங்கம்

17th Apr 2022 06:10 AM

ADVERTISEMENT

 

அரூரில் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாநில மகளிா் ஆணையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கருத்தரங்கில் அரூா் பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தலைமை வகித்தாா். இளம்வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்துதல், மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்தல், வரதட்சிணை கொடுமை குறித்து மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மருத்துவா் மாலதி நாராயணசாமி கருத்துரை வழங்கினாா்.

இந்தக் கருத்தரங்கில் பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், வாா்டு உறுப்பினா்கள் முல்லை ரவி, அருள்மொழி, உமாராணி, சமூக ஆா்வலா்கள் பத்மா மாரியப்பன், ஸ்ரீதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT