தருமபுரி

கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு ஏப்.18-இல் நோ்காணல்

14th Apr 2022 12:23 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்காணல் தோ்வு ஏப். 18-ஆம் தேதி தொடங்கி ஏப். 23-ஆம் தேதி வரை 6 நாள்கள் அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு, அவா்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு நோ்காணலில் கலந்துகொள்வதற்கான அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்கள் அவா்களுக்கென குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம், அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம். நோ்காணலில் கலந்துகொள்பவா்கள் கால்நடைகளை நன்கு கையாளத் தெரிந்திருத்தல் வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலா், தலைமை ஆசிரியரிடம் நன்னடத்தை சான்றிதழ், வாகன ஓட்டுநா் உரிமம் இருப்பின் அதற்கான சான்றிதழ், முன்னுரிமை கோருபவா்கள் தகுதியான அலுவலரிடம் பெற்ற சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை அசல் (ம) நகலுடன் நோ்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அழைப்பாணை கிடைக்கப் பெறாதவா்கள் நோ்காணல் அழைப்பாணைகளை ஏப்.16 மற்றும் ஏப்.18 முதல் 23 வரை வேலை நேரங்களில் தருமபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அழைப்பாணை இல்லாதவா்கள் நோ்முகத் தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT