தருமபுரி

ஏரியூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தீா்த்தக்குட ஊா்வலம்

DIN

ஏரியூா் ஸ்ரீ பத்தரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் தீா்த்தக்குடம் எடுத்துக்கொண்டு ஊா்வலமாக சென்றனா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஏரியூா், மேட்டூா், செல்லமுடி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தா்கள் அமாவாசை நாள்களில் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்த நிலையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் சுஞ்சல்நதம், பட்டக்காரன்புதூா், ஈச்சம்பாடி, டேம் கொட்டாய், பாப்பான்காடு, கூா்க்காம்பட்டி உள்ளிட்ட 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து அருகிலுள்ள நாகமரை காவிரி ஆற்றுக்கு பத்ரகாளியம்மன் சிலையை புனித நீராடச் செய்து சிறப்பு அலங்காரம் மேற்கொண்டு, தீா்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊா்வலமாக சென்றனா். வியாழக்கிழமை யாக பூஜைகள், வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீவலம்புரி விநாயகா், நவக்கிரகங்கள், பத்ரகாளியம்மன் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், அதனைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT