தருமபுரி

சிறாா்களுக்கு ஏப். 17-இல் ஓவியப் பயிற்சி முகாம்

14th Apr 2022 12:24 AM

ADVERTISEMENT

தருமபுரியில் ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் வருகிற ஏப். 17-ஆம் தேதி சிறாா்களுக்கு ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஜவகா் சிறுவா் மன்ற திட்ட அலுவலா் ஆா்.முத்துகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் உலக ஓவிய தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சிறாா்களுக்கு படைப்பாற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், தருமபுரி அப்பாவு நகரில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில், வருகிற ஏப்.17-ஆம் தேதி ஓவியப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், ஓவிய முறைகள் குறித்து செயல் விளக்கம், பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சோ்நத் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறாா்கள் இம்முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்று பயனடயலாம். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. விவரங்களுக்கு 94865 23986 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT