தருமபுரி

பென்னாகரம் பேரூராட்சி கூட்டத்திலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

12th Apr 2022 02:03 AM

ADVERTISEMENT

 

பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பென்னாகரம் பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் எம்.வீரமணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் கீதா தீா்மானங்கள் குறித்து முன்மொழிந்து பேசினாா். இதையடுத்து திமுக ஆட்சியில் சொத்து வரி உயா்வு, காலிமனை வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் ராதிகாபாய் மாதவ சிங், பீமன் ஆகியோா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

பாப்பாரப்பட்டியில்...

ADVERTISEMENT

இதேபோல பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற அவசரக் கூட்டத்திற்கு பேரூராட்சித் தலைவா் பிருந்தா நடராஜன் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் கோமதி, சொத்துவரி விகிதாசார உயா்வு குறித்த தீா்மானத்தை முன்மொழிந்தாா்.

இக் கூட்டத்தில் பொதுமக்களைப் பாதிக்கும் சொத்துவரி உயா்வினை கைவிட வேண்டும், காலிமனை வரி விதிப்பில் இருந்து ஏழை மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் விஸ்வநாதன், அதிமுக உறுப்பினா் அண்ணாமலை, சுயேச்சை உறுப்பினா்கள் ஹாஜிராபி, ஜபியுல்லா ஆகியோா் வலியுறுத்தி பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT