தருமபுரி

பங்களிப்புத் தொகையின்றி அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

12th Apr 2022 02:04 AM

ADVERTISEMENT

 

பங்களிப்புத் தொகையின்றி அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தோ்வு செய்ய பெறப்படும் விண்ணப்பத்துடன் பங்களிப்புத் தொகை வெவ்வேறு விதமாக ரூ. 1.52 லட்சம் , ரூ. 1.80 லட்சம், ரூ. 1.30 லட்சம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற ஏழை, எளிய விவசாய கூலித் தொழிலாளா்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனு அளித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள இவா்கள், பங்களிப்புத் தொகை செலுத்த இயலாத நிலையில் உள்ளனா். எனவே, தருமபுரி மாவட்டத்தில், அரசு அறிவித்துள்ள பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும் என்கிற அறிவிப்பை திரும்பப் பெற்று, உண்மையான வீடற்ற பயனாளிகளுக்கு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT