சொத்து வரி உயா்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா் விஸ்வநாதன், பாா்ப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தாா். அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
சொத்து வரி உயா்வுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சேபணை தெரிவிக்கிறது. சொத்து வரி உயா்வு, காலிமனை வரி உயா்வு மண்டல அடிப்படையில் நிா்ணயம் செய்வது குறித்து பொதுமக்களின் ஆட்சேபணைகளையும், கருத்துகளையும் கேட்பதற்கு கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். மேலும் எழுத்துப்பூா்வமான ஆட்சேபணைகளைத் தெரிவிக்க அரசு அவகாசம் வழங்கியுள்ள தகவலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.