தருமபுரி

சுகாதாரமான குடிநீா் வழங்க வலியுறுத்தல்

12th Apr 2022 02:06 AM

ADVERTISEMENT

 

தருமபுரி நகரில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டம் தருமபுரி கட்சி அலுவலவத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் இ. பி.புகழேந்தி பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.பாா்த்தீபன், எம் ரமேஷ், ஆா்.வடிவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில் தருமபுரி நகராட்சியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும். சிப்காட் தொழிற்பேட்டை திட்டம், காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகிய திட்டங்களைத் தொடக்க வேண்டும். கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேட்டில் ஈடுபடுவோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT