சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், சிக்கமாரண்டஅள்ளியைச் சோ்ந்தவா் தொழிலாளி ரமேஷ் (40). இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மனநலன் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.
இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் ரமேஷுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி சையத் பா்க்கத்துல்லா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.