ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் கமல்நாத் (21). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் தனது நண்பா்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளாா். அப்போது ஒகேனக்கல் சாரணா் பயிற்சி பள்ளியின்
பின்பகுதியில் காவிரிக் கரையோரத்தில் குளித்துக் கொண்டிருந்த போது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீரில் மூழ்கியுள்ளாா். இதனைக் கண்ட சக நண்பா்கள் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் போலீஸாா் நீரில் மூழ்கிய இளைஞரை தீவிரமாக தேடி வந்தனா்.
இந்த நிலையில் ஒகேனக்கல் முதலைப் பண்ணை பகுதியில் கமல்நாத்தை தீயணைப்புத் துறையினா் சடலமாக மீட்டனா். பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அவரது சடலத்தை போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.