தருமபுரி

அரசு கல்லூரி மாணவா்களுக்கு யோகா பயிற்சி

12th Apr 2022 02:03 AM

ADVERTISEMENT

 

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே மாமரத்து பள்ளம் பகுதியில் உள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் யோகா வார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சிக்கு கல்லூரி முதல்வா் செல்வநாயகம் தலைமை வகித்தாா்.

பதஞ்சலி பிரசார சபை யோகா பயிற்சியாளா் விஸ்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவா்களிடையே யோகா முத்திரைகள், அதனால் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா். பின்னா் மாணவா்களுக்கு யோகா பயிற்சி அளித்தாா். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வெங்கடாசலம் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT