தருமபுரி

அரூரில் விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

5th Apr 2022 12:23 AM

ADVERTISEMENT

அரூரில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியப் பொருளாளா் டி.ஜடையாண்டி தலைமை வகித்தாா்.

கீளானூா் அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்த வேண்டும். கீளானூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்தக் கிராமத்தில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளைச் சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். கீளானூரில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகள், வாய்க்கால்களைத் தூா்வார வேண்டும். கிராமத்துக்குத் தேவையான சாலை வசதி, தெரு விளக்குகள், வீட்டு மனைப் பட்டா, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். எச்.அக்ரஹாரம் ஊராட்சி நெருப்பாண்டகுப்பம் , மத்தியம்பட்டி ஊராட்சி கைலாயபுரம் ஆகிய கிராமங்களில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டினை போக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, மாவட்டப் பொருளாளா் இ.கே.முருகன், ஒன்றியச் செயலாளா் பி.குமாா், அகில இந்திய விவசாயிகள் சங்க வட்டச் செயலாளா் எஸ்.கே.கோவிந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT