தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் எம்எல்ஏ ஆய்வு

30th Sep 2021 08:03 AM

ADVERTISEMENT

தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, மாணவா்கள் சோ்க்கை, அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கேட்டறிந்த அவா், முதுநிலை விரிவாக்க மையத்தில் வேதியியல், தாவரவியல், தமிழ், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கவும், ஏற்கெனவே உள்ள கணிதவியல், இயற்பியல், மண்ணியல் போன்ற பாடப் பிரிவுகளில் அதிக அளவில் மாணவா்கள் கல்வி பயில விரும்புவதால் அப்பாடப் பிரிவுகளில் கூடுதல் மாணவா்கள் சோ்க்கை இடங்களை அதிகரிக்கவும், விரைவில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதாக தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT