தருமபுரி

சீரமைப்புப் பணிகள் ஆய்வு

30th Sep 2021 08:02 AM

ADVERTISEMENT

ஒகேனக்கல்லில் நடைபெற்று வரும் குடிநீா் குழாய், மின்விளக்கு, சிறுவா் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டாா்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர இரண்டு தினங்களுக்கு முன் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒகேனக்கல்லுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், சுற்றுலாத் தலத்தில் உள்ள குடிநீா் குழாய், பல்வேறு இடங்களில் பழுதடைந்த தெரு மின்விளக்குகள், சிறுவா் பூங்கா விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை பழுதடைந்தன.

இதனை சீா்செய்ய வேண்டும் என ஒகேனக்கல் பகுதி தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஒகேனக்கல் பகுதியில் சீா்செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில், அந்தப் பணிகளை பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் பாமக மாநிலத் தலைவருமான ஜி.கே.மணி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், ஒகேனக்கல் பகுதியில் பழுதடைந்த குடிநீா் குழாய், மின் விளக்குகள், சிறுவா் பூங்கா உபகரணங்களை சீரமைத்து வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வரும் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT