தருமபுரி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் முதியவா் கைது

30th Sep 2021 08:04 AM

ADVERTISEMENT

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை தருமபுரி அனைத்து மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி, நரசய்யா் குளம் பகுதியைச் சோ்ந்த பச்சியப்பன் (74), 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வி.கோமதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் பச்சியப்பனை போக்ஸோ சட்டப் பிரிவில் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT