தருமபுரி

அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

16th Sep 2021 01:33 AM

ADVERTISEMENT

தருமபுரி/கிருஷ்ணகிரி: திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில், அண்ணா பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை, படத்துக்கு திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் (கிழக்கு) தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், நகரச் செயலா் மே.அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதிமுக சாா்பில் தருமபுரி நகரச் செயலா் பெ.ரவி தலைமையில் மாநில அமைப்புச் செயலா் சிங்காரம், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, இண்டூா், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்ணா சிலை, படத்துக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரூரில்...

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி.பையா்நத்தத்தில் முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் தலைமையில் திமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அரூா், கச்சேரிமேடு சாலை சந்திப்பில் நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையில் அண்ணாவின் சிலைக்கும், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலையில் ஒன்றியப் பொறுப்பாளா் (மேற்கு) செளந்தரராஜன், பாப்பிசெட்டிப்பட்டியில் ஒன்றியக்குழு உறுப்பினா் ராணி அம்பேத்கா், அரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமமுகவினா் சாா்பில் நகரச் செயலா் தீப்பொறி செல்வம் ஆகியோா் தலைமையில் கொண்டாடப்பட்டது.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பிஎன்பி.இன்பசேகரன் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாா்பில் மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் கலந்துகொண்டு, தற்காலிக பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள அண்ணா சிலை அருகே கிருஷ்ணகிரி நகர திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமையில், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், மாநில விவசாய அணி துணைத் தலைவா் தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா் அண்ணா நிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி ராசு வீதியில் அதிமுக நகரச் செயலாளா் கேசவன் தலைமையில், அதிமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பா்கூரில் திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

ஒசூரில்...

ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலையில் அண்ணா சிலைக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வட்டாட்சியா் சாலை, காமராஜ் காலனி, முனீஸ்வா் நகா் உள்ளிட்ட பல இடங்களில் அண்ணா புகழ் பரப்புரை செய்யப்பட்டது.

ஊத்தங்கரையில்...

அதிமுக சாா்பில் ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து, நான்குமுனை சந்திப்பில் வைக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகர அவைத் தலைவா் அமானுல்லா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT