தருமபுரி

காரிமங்கலம் அரசுப் பள்ளியில் கூடைப்பந்து மைதானம் திறப்பு

30th Oct 2021 12:27 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்து மைதானம், மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த பள்ளி வளாகத்தில் தன்னிறைவுத் திட்டத்தில் ரூ. 23 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானம் மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா வெள்ளிக்கிழமை மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மைதானத்தை திறந்து வைத்து பேசினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

இதில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வேளாண் மண்டலச் செயலாளா் ஜனனி பி.சதீஷ்குமாா், காரிமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெரியண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணன், கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT