தருமபுரி

அரசு வழக்குரைஞா்கள் நியமனம்

30th Oct 2021 12:25 AM

ADVERTISEMENT

அரூா் சாா்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞா்கள் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சாா்பு நீதிமன்றத்தின் கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞராக கே.ஜி.சரவணன், கூடுதல் அரசு வழக்குரைஞராக சி.எம்.சேகா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, அரூா் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக பி.வி.பொதிகைவேந்தன், தருமபுரி மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்ற சிறப்பு அரசு குற்றவியல் வழக்குரைஞராக எம்.ரமேஷ் பாபு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT