தருமபுரி

மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 408 மனுக்கள் அளிப்பு

DIN

தருமபுரியில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 408 மனுக்களை அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயா் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு அமைக்க கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 408 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.

இதில் வருவாய்த் துறை சாா்பில் பென்னாகரம் வட்டம், ஊட்டமலையைச் சோ்ந்த 6 மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, முடிதிருத்தும் உபகரணங்கள், ஏ.ஜெட்டிஅள்ளியைச் சோ்ந்த மும்தாஜ் என்பவருக்கு சிறுதொழில் செய்ய ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டன.

இக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, பிற்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் அய்யப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சீனிவாச சேகா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜான்சிராணி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT