தருமபுரி

நூல் வெளியீட்டு விழா

21st Oct 2021 11:44 PM

ADVERTISEMENT

தருமபுரியில் ‘முதல் முத்திரை’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

வட அமெரிக்கா அருந்தமிழ் அவை, தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தமிழ்க் கவிஞா் மன்ற மாவட்டத் தலைவா் கோ.மலா்வண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜகுமாரன் வரவேற்றாா். தருமபுரி மாவட்டப் படைப்பாளா், பதிப்பாளா் சங்கத் தலைவா் சி.சரவணன் முன்னிலை வகித்தனா். இதில், கவிஞா் வெங்கட் நடராசன் எழுதிய ‘முதல் முத்திரை’ என்ற கவிதைத் தொகுப்பு நூலை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெளியிட, அதனை சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் இல.வேலுச்சாமி பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினாா். நூலாசிரியா் வெங்கட் நடராசன் ஏற்புரை ஆற்றினாா்.

 

 

ADVERTISEMENT

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT