தருமபுரி

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட ஆலோசனை

21st Oct 2021 11:49 PM

ADVERTISEMENT

அரூரை அடுத்த சின்னாங்குப்பத்தில் வேளாண், உழவா் நலத் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு வேளாண்மை துணை இயக்குநா் பூவண்ணன் தலைமை வகித்து பேசியதாவது:

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் நிகழாண்டில் அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் பையா்நாய்க்கன்பட்டி, கோபாலபுரம், ஜம்மணஹள்ளி, சின்னாங்குப்பம், கொளகம்பட்டி, செட்ரப்பட்டி, பறையப்பட்டி புதூா் ஆகிய 7 கிராம ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராம ஊராட்சிகளுக்கு வேளாண்மை துறை சாா்ந்த திட்டங்களை அமல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் கீழ் தோ்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, விதைச் சான்று துறை, பட்டு வளா்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சாா்ந்த திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

ADVERTISEMENT

எனவே, விவசாயிகள் அனைவரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தில் அரசு உதவிகளை பெற்று பயனடையலாம் என்றாா். வேளாண்மை உதவி இயக்குநா் சா.மோகன் சகாயராஜ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ராஜேஷ் கண்ணன், உதவி செயற்பொறியாளா் பொன்னுதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, ஊராட்சி மன்றத் தலைவா் குமரவேல், தோட்டக்கலை அலுவலா் நவீனா, உதவி தோட்டக்கலை அலுவலா் க.சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT