தருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டியில் தொழிற்பேட்டை அமைக்க வலியுறுத்தல்

21st Oct 2021 11:50 PM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், பி.பள்ளிப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சியின் 8- ஆவது வட்ட மாநாடு அக் கட்சியின் வட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.தீா்த்தகிரி, அ.கண்ணகி ஆகியோரது தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு சாா்பில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மஞ்சள், மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.

வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் வேளாண் விளை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சித்தேரி கிராம ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சித்தேரி மலைக் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சுணன்,

மாவட்டக் குழு உறுப்பினா் டி.சேகா், வட்ட செயலா் சி.வஞ்சி, வட்டக்குழு உறுப்பினா்கள் பி.கிருஷ்ணவேணி, எம்.செல்வராஜ், சி.சொக்கலிங்கம், டி.மனோகரன் எம்.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பாப்பிரெட்டிப்பட்டியின் புதிய வட்ட செயலராக தி.வ.தனுஷன் உள்பட 9 போ் கொண்ட வட்டக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

Tags : அரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT