தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் நாளை 585 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

21st Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் 585 மையங்களில் சனிக்கிழமை (அக். 23) கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் அக். 20-ஆம் தேதி வரை 7,62,039 போ் முதல் தவணை தடுப்பூசியும், 2,33,586 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனா்.

கரோனா மூன்றாம் அலையைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஆறாம் கட்டமாக 585 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

இதற்காக 86,215 தடுப்பூசி டோஸ்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி முகாம்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் துணை ஆட்சியா் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தும் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் 50 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தருமபுரி மாவட்டத்தில் விடுபட்ட 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT