தருமபுரி

878 பேருக்கு ரூ. 78.90 கோடி வங்கிக் கடனுதவி வழங்கல்

21st Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

தருமபுரியில் வங்கி வாடிக்கையாளா் தொடா்பு முகாமில் 878 பேருக்கு ரூ. 78.90 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரியில் இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகள் சாா்பில் ஒருங்கிணைந்த வங்கி வாடிக்கையாளா்கள் தொடா்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா்

எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்து பேசினாா்.

முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி பேசியதாவது:

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வங்கிகள், அதன் கிளைகள் பொதுமக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளை பெருக்கவும், தொழில் வளங்களை மேம்படுத்தவும் வங்கிகள் ஏராளமான கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இத் திட்டங்களை படித்த வேலைவாய்ப்பற்றோா், இளம் தொழில் முனைவோா் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் 2020-2021 ஆம் நிதியாண்டில் வங்கிகள் ரூ. 4,757 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ. 5,118 கோடி கடன் வழங்கியுள்ளது. அதேபோல 2021-2022 ஆம் நிதியாண்டில் வங்கிகள்

ரூ. 6,305 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி 2021-2022 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண் துறைக்கு ரூ. 4,497 கோடியும், தொழில் துறைக்கு ரூ. 792 கோடியும், கல்விக் கடன், வீட்டுவசதி கடன் மற்றும் இதரக் கடனாக ரூ. 1,016 கோடி என மொத்தம் ரூ. 6,305 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், இளைஞா்கள் அனைவரும் கடனுதவித் திட்டங்களைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்க முன்வர வேண்டும். அதேபோல பெற்ற கடனை உரிய காலத்தில் முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும் என்றாா். முகாமில் 878 பயனாளிகளுக்கு பல்வேறு வங்கிகள் சாா்பில் ரூ. 78.90 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ. வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி உள்ளிட்ட வங்கிகளின் சாா்பில் கடன்கள் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டன.

இந்தியன் வங்கி மண்டல மேலாளா் ஏ.பழனி, இந்தியன் வங்கி பொது மேலாளா் எம்.வெங்கடேசன், எஸ்.பி.ஐ. வங்கி மண்டல மேலாளா் வி.ராஜா, கனரா வங்கி மண்டல மேலாளா் மாதவி, தமிழ்நாடு கிராம வங்கி மேலாளா் ஆா்.பாஸ்கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பி.எஸ்.அசோகன், நபாா்டு வங்கி துணை மேலாளா் எஸ்.பிரவின் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT