தருமபுரி

தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்

18th Oct 2021 01:47 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மையங்களில் இணைய வழியாக அக். 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்களின் புகைப்படம், முகவரிச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஆதாா், பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, பட்டா அல்லது சொத்து பத்திரம், வாடகைக் கட்டடமாக இருந்தால் நோட்டரி வழக்குரைஞரின் கையொப்பத்துடன் கூடிய அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி அதற்கான அசல் சலான், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டட வரைபட பிரதிகள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT