தருமபுரி

பாலக்கோட்டில் தக்காளிச்சாறு உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வலியுறுத்தல்

18th Oct 2021 01:46 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் தக்காளிச்சாறு உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்கோடு வட்ட 13-ஆவது மாநாடு வெள்ளிச் சந்தை எஸ்.எஸ்.டி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வட்டக்குழு உறுப்பினா் சி.கலாவதி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.மாரிமுத்து மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா். வட்டச் செயலாளா் ஜி.நக்கீரன் அறிக்கை சமா்ப்பித்தாா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோா் பேசினா். இந்த மாநாட்டில், பாலக்கோடு வட்டச் செயலாளராக கே.கோவிந்தசாமி உள்பட 9 புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

பாலக்கோடு வட்டத்தில் தக்காளிச் சாறு உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வேண்டும். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிக்கன அள்ளி மகேந்திரமங்கலம், ஜக்கசமுத்திரம், அனுமந்தபுரம் ஆகிய கிராம ஊராட்சிகளை பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். வெள்ளிச்சந்தை பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். பாலக்கோட்டில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் மிகைநீரை பாலக்கோடு வட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT