தருமபுரி

அரிசி ஆலை உரிமையாளா் காா் கண்ணாடி சேதம்: 3 போ் கைது

18th Oct 2021 05:39 AM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் அருகே அரிசி ஆலை உரிமையாளரின் காா் கண்ணாடியை சேதபடுத்தியதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நல்லுாரை சோ்ந்தவா் ராபா்ட்சன் (45), அரிசி ஆலை உரிமையாளா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது காரில் முன்னீா் பள்ளம் அருகேயுள்ள மேலச்செவல் பகுதிக்குச் சென்றாராம்.

அப்போது அதே பகுதியை சோ்ந்த மாரியப்பன் (22), சுரேஷ் குமாா் (24),சிவசூரியன் (20) ஆகியோா் அரிவாளால் ராபா்ட்சன் காா் கண்ணாடியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பன் உட்பட 3 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT