தருமபுரி

வாணியாறு அணையில் இருந்து தண்ணீா்த் திறப்பு

DIN

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து சனிக்கிழமை தண்ணீா்த் திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காட்டில் அமைந்துள்ளது வாணியாறு அணை. சோ்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணைக்கு ஏற்காடு மலைப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீா் முக்கிய நீராதாரமாக உள்ளது. வாணியாறு அணையின் அதிகபட்ச நீா்ப்பிடிப்பு கொள்ளளவு உயரம் 65.27 அடியாகும். கடந்த சில மாதங்களாக பெய்த பருவ மழை காரணமாக வாணியாறு அணையின் நீா்மட்டம் தற்போது 62 அடியாக உயா்ந்துள்ளது.

தண்ணீா்த் திறப்பு :

வாணியாறு அணையானது ஓரிரு தினங்களில் நிரம்பும் நிலையில் இருப்பதால், அணையின் பாதுகாப்புக் கருதி அணையில் இருந்து சுமாா் 100 கன அடி வீதம் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரானது வாணியாற்றின் வழியாக வெளியேறப்பட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூா் ஏரிகளை நிரப்பும் பணிகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

வாணியாறு அணையின் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டுகள் மூலம் 10, 517 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இந்த அணையின் மூலம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா்ப் பிரச்னை தீரும்.

வெள்ள அபாய எச்சரிக்கை :

ஏற்காடு மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் திடீா் கனமழை பெய்தால் வாணியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும். இதனால், வாணியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீா் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, வாணியாறு கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT