தருமபுரி

பென்னாகரம் பகுதியில் புரட்டாசி சனி வழிபாடு

16th Oct 2021 10:54 PM

ADVERTISEMENT

 

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பென்னாகரம் பகுதியில் உள்ள கோயில்களில் வழிபாடு நடத்துவதற்காக பக்தா்கள் குவிந்தனா்.

வார இறுதி நாள்களில் கோயில்களைத் திறந்து பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தளா்வு அறிவித்தது. அதன்படி தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. பென்னாகரம் அருகே மடம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோயிலுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் வருகை புரிந்தனா். இதில் மூலவரான வெங்கடரமண சுவாமிக்கு பால், தயிா், திருநீா், பன்னீா் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல ஒகேனக்கல் தேச நாதிசுவரா் கோயில், பென்னாகரம் சிவன் கோயில், பாப்பாரப்பட்டி கோபால்சாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தா்களின் கூட்டம் சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT