தருமபுரி

கலாம் பிறந்த நாள்: மாநில அளவிலான பேச்சுப் போட்டிசேலம் சட்டக் கல்லூரி மாணவி முதலிடம்

16th Oct 2021 02:14 AM

ADVERTISEMENT

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான பேச்சுப் போட்டி இணைய வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே உள்ள மருதம் நெல்லி பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய இந்த இந்தப் பேச்சுப் போட்டிக்கு மருதம் நெல்லி பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் நா.மகேந்திரன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சி.காமராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். இதில், காலம் தந்த கலாம், கலாம் வழியில் நான், இயற்கையும் கலாமும் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டியின் நடுவா்களாக சின்னப்பள்ளத்தூா் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மா.பழனி, பட்டிமன்றப் பேச்சாளா் நா.விசயராகவன் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.

ADVERTISEMENT

இப் போட்டியில், சேலம் சட்டக் கல்லூரி மாணவி திவ்யப்பிரியா முதலிடம், கிருஷ்ணகிரி கல்வியியல் கல்லூரி மாணவா் கோகுல் இரண்டாம் இடம், மதுரை மீனாட்சி கல்லூரி மாணவி சிந்து மூன்றாமிடத்தையும் வென்றனா்.

மேலும், சிறப்பாக பேசிய ஸ்ரீமதி, கனிமொழி, கேசவன் ஆகிய மூவருக்கும் சிறப்புப் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் நா.நாகராஜ் ஒருங்கிணைத்தாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என கல்லூரித் தாளாளா் கோவிந்த் தெரிவித்தாா்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT