தருமபுரி

2017-18ஆம் ஆண்டுக்கான மேல்நிலை தனித்தோ்வா்கள் கவனத்துக்கு...

16th Oct 2021 02:14 AM

ADVERTISEMENT

கடந்த 2017-18-ஆம் ஆண்டு மேல்நிலை தனித் தோ்வு எழுதியவா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் கோ.காவேரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாா்ச் 2017 முதல் செப்டம்பா் 2018 வரை மேல்நிலைக் கல்வி தனித்தோ்வா்கள், அனைத்து பருவங்களுக்குரிய அசல் சான்றிதழ்கள் உரிமை கோரப்படாமல் இருக்கும் சான்றிதழ்களை, கழிவுத்தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, கடந்த 2017-18ஆம் ஆண்டு பருவங்களில் தோ்வெழுதி அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தோ்வா்கள், தருமபுரி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உரிய ஆளறிச் சான்றிதழ்களுடன் (தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல்) ஆகியவற்றுடன் வரும் நவ. 30-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட்ட பின் தனித்தோ்வா்கள் உரிமை கோரலாகாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பங்களை, ‘‘அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் இரண்டாம் தளம், ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி’’ தொலைபேசி - 04342 233812 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT