தருமபுரி

தூய்மைப் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

16th Oct 2021 02:07 AM

ADVERTISEMENT

தூய்மைப் பணியாளா்கள், நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோரை முழு நேரப் பணியாளா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என்.மனோகரன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாவட்டப் பொதுச் செயலாளா் கே.மணி, துணைத் தலைவா் சுதா்சனன், துணைச் செயலாளா் ஆா்.நடராஜன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோரை முழுநேர பணியாளா்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாதம் ரூ. 250 பெறும் பணியாளா்களுக்கு அரசாணையின்படி, ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊராட்சியில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். வீடற்ற உள்ளாட்சிப் பணியாளா்களுக்கு வீட்டுமனைப் பட்டா, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊராட்சிகளில் தினக்கூலியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT