தருமபுரி

தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து

16th Oct 2021 02:14 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே டிரைலா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கொச்சிக்கு இரும்பு பேல் பாரம் ஏற்றிய டிரைலா் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த ராஜு (34) ஓட்டிச் சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநா் ராஜு மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த விபத்தில் சிக்கிய லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT