தருமபுரி

வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிா் வளா்ச்சி ஊக்கிகள் விற்பனை

16th Oct 2021 02:06 AM

ADVERTISEMENT

பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிா் வளா்ச்சி ஊக்கிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தேவைப்படும் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ம.விஜயகுமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிா்களில் கரும்பு, பருத்தி, பயறு வகைப் பயிா்கள், தென்னை, மக்காச்சோளம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பயிா்களில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையினால் அதிக மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள பயிா் வளா்ச்சி ஊக்கிகளை இலைவழியாக தெளித்து நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய இயலும். இந்தப் பயிா் வளா்ச்சி ஊக்கிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பயறு ஒன்டா், நிலக்கடலை ரிச், கரும்பு பூஸ்டா், மரவள்ளி பூஸ்டா் மற்றும் அா்கா காய்கறி நுண்ணூட்டக் கலவை மற்றும் வறட்சி மேலாண்மைக்கான பி.பி.எஃப்.எம். போன்றவை தற்போது விற்பனைக்கு உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT