தருமபுரி

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

29th Nov 2021 11:59 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் வாராந்திர பொதுமக்கள் குறை தீா்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, உதவித்தொகைகள், குடிநீா் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 152 மனுக்களை அளித்தனா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி, தகுதியின் அடிப்படையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT