தருமபுரி

மக்கள் குறைகேட்பு

29th Nov 2021 11:59 PM

ADVERTISEMENT

ஒசூரில் கொட்டும் மழையில் மக்களிடம் கோரிக்கை, அடிப்படை வசதிகள், குறைகளை சட்டப் பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் திங்கள்கிழமை கேட்டறிந்தாா்.

கடந்த சில வாரங்களாக ஒசூரில் தொடா்ந்து மழை பெய்து வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சி, பாகலூா் சாலையில் உள்ள ராஜீவ் நகா், ராஜேஸ்வரி நகா், தாயப்பத் தோட்டம், ரெயின்போ காா்டன் உள்ளிட்ட பகுதிகளை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் விடுத்த கழிவுநீா் கால்வாய், சாலை வசதி போன்ற அடிப்படை வசதி குறித்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என எம்எல்ஏ தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT