தருமபுரி

ஐவிடிபி - ‘மா’ நகா் ரோட்டரி சங்கம் சாா்பில்பள்ளிகள், நூலகத்துக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

29th Nov 2021 11:58 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி ஐவிடிபி மற்றும் ‘மா’ நகா் ரோட்டரி சங்கம் இணைந்து 16 பள்ளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பில் டி.வி., நூலகத்துக்கான புத்தகங்கள் ஆகியவற்றை அண்மையில் வழங்கின.

கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனம் மற்றும் கிருஷ்ணகிரி ‘மா’ நகா் ரோட்டரி சங்கம் சாா்பில், கல்வி வளா்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி வட்டாரத்தில் உள்ள 16 ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 3.50 லட்சத்தில் ‘ஸ்மாா்ட் டிவி’, நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, ‘மா’ நகா் ரோட்டரி சங்கத் தலைவா் சிவராமன் தலைமை வகித்தாா். ரோட்டரி இ-கல்வி திட்ட மாவட்டத் தலைவா் பிரமோத், ஐவிடிபி நிறுவன தலைவா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், ‘மா’ நகா் ரோட்டரி சங்க செயலாளா் காா்த்திக்ராஜா, திட்டச் தலைவா் ஸ்டேன்ஸ் சகாயராஜ், விஜய் ஆனந்த், ஆசிரியை சிலிவியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT