தருமபுரி

சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 89.50 லட்சம் கடனுதவி வழங்கல்

29th Nov 2021 11:56 PM

ADVERTISEMENT

தருமபுரியில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 89.50 லட்சம் கடனுதவிகள், எல்லைக் காவலருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 331 மனுக்களை அளித்தனா்.

இதில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, மாநில எல்லையைப் பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகளை சிறப்பிக்கும் வகையில், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, சின்னமுத்து முதலி தெருவைச் சோா்ந்த எல்லைக் காவலா் கிருஷ்ணசாமி தியாகத்தை சிறப்பித்து ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் தருமபுரி மாவட்ட மகளிா் திட்டம் சாா்பில், 9 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 89,50,000 வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளையும், 2019-ஆம் ஆண்டில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகமான தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோ்வு செய்யப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரனுக்கு கேடயம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித்துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, உதவி ஆணையா் (கலால்) ஆ.தணிகாசலம், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயக்குமாா், மாவட்ட தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் (பொ) தே.ஜெயஜோதி, உதவி இயக்குநா் (ஊராட்சி) சீனிவாச சேகா், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT