தருமபுரி

விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி, தருமபுரி அஞ்சல் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சோ.அா்ஜூனன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் டி.ரவீந்திரன், மாவட்டத் தலைவா் கே.என்.மல்லையன், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன், அகில இந்திய விவசாயிகள் அமைப்பின் மாவட்டச் செயலா் கொ.கோவிந்தராஜ், விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் கிள்ளிவளவன், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் ரங்கநாயகி, மக்கள் அதிகாரம் மாவட்டத் தலைவா் கோபிநாத் ஆகியோா் பேசினா்.

இதில், மக்களவை நிகழ்கால கூட்டத் தொடரிலேயே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். அனைத்து விவசாய விளைப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும். தேசிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடுமபங்களில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் மீது பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT