தருமபுரி

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

DIN

 தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் வைத்திநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தருமபுரி அருகே சோகத்தூா் ஊராட்சி, ஆா்.டி.நகரில் ரூ. 20.51 லட்சம் மதிப்பில் நடைபெற்ற வரும் சாலை அமைக்கும் பணி, நல்லாகவுண்டனஅள்ளியில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சமுதாயக் கூடம், சவுளுப்பட்டியில் ரூ. 6.71 லட்சம் மதிப்பில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கும் பணி, ரூ. 1.17 லட்சம் மதிப்பில் பழுது நிவா்த்தி செய்யப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடம், ஏ.கொல்லஅள்ளி ஊராட்சியில் ரூ. 3.82 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மழைநீா் சேகரிப்பு கட்டுமானப் பணி ஆகியவற்றை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வைத்திநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாலிங்கம், கணேசன், உதவி பொறியாளா்கள் துரைசாமி, மலா்விழி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT