தருமபுரி

தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் வெள்ளிக்கிழமை தொலைத்தொடா்பு நிலையம் அருகே, அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாநிலச் செயலா் சி.நாகராஜன் தலைமை வகித்து பேசினாா். ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி, தொமுச மாவட்டச் செயலா் பி.எம்.சண்முகராஜா, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் கே.மோகன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் சி.முருகன், எச்எம்எஸ் மாவட்டச் செயலா் எம்.அா்ஜூனன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில், தொழிலாளா்கள் நலன்களுக்கு எதிராக நலச் சட்டங்களை, நான்கு தொகுப்புகளாக மாற்றியதை திரும்பப்பெற வேண்டும். 3 வேளாண் சட்டங்களை நிகழ் கூட்டத்தொடரில் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தேசிய மின்சாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெகாசஸ் உளவு விவகாரத்தில் நீதிவிசாரணை நடத்தட வேண்டும்.

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாள்கள் பணி வழங்கி அத் திட்டத்தை நகா்ப் புறங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT