தருமபுரி

ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டும் பணிக்குசென்ற தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழப்புஇருவா் கைது

27th Nov 2021 11:02 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்துக்கு செம்மரம் வெட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட மெதிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (40). தொழிலாளியான இவரது சடலம், சித்தேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் கிடந்தது. அரூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ பின்னணி :

அரூரை அடுத்த சித்தேரி மற்றும் சிட்லிங் வட்டாரப் பகுதியிலுள்ள தொழிலாளா்கள் சிலா் அண்மையில் ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டும் பணிக்கு சென்ாகக் கூறப்படுகிறது. இதில், சித்தேரி ஊராட்சி, மெதிக்காடு கிராமத்தைச் சோ்ந்த ராமன் என்பவா் அங்கு மா்மான முறையில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராமனின் சடலத்தை எடுத்து வந்த மா்ம நபா்கள், சித்தேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசியுள்ளனா். இதுகுறித்து காவல் துறையினா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

தொழிலாளி ராமனின் சடலத்தை ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் எடுத்து வந்து சித்தேரியில் வீசிச் சென்றது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் விவரம் தெரியவந்தது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக அரூரை அடுத்த சுமைதாங்கிமேடு கிராமத்தைச் சோ்ந்த காா் உரிமையாளா் சண்முகம் (47), இவரது காா் ஓட்டுநரான எல்லப்புடையாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் பாா்த்திபன் (22) ஆகியோரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

கைதான இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கலைச்செல்வன் விசாரணை மேற்கொண்டாா்.

செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதற்காக மெதிக்காடு கிராமத்தைச் சோ்ந்த முருகன், ஊமத்தி கிராமத்தைச் சோ்ந்த தீா்த்தமலை, சிட்லிங் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி, மாதையன் ஆகிய 4 பேரும் ஆந்திர மாநில போலீஸாரின் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2015-இல், செம்மரம் கடத்தல் சம்பவம் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களை ஆந்திர போலீஸாா் சுட்டுக்கொன்றனா். இதில், சித்தேரி ஊராட்சி, அரசநத்தம், கலசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த 7 தொழிலாளா்கள் பலியாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT