தருமபுரி

விலைவாசி உயா்வு :காங்கிரஸ் கட்சியினா் விழிப்புணா்வு பிரசாரம்

27th Nov 2021 11:03 PM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வு குறித்து காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசார பயணம் சனிக்கிழமை மேற்கொண்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற மக்கள் விழிப்புணா்வு பிரசார பயணத்துக்கு வட்டாரத் தலைவா் ஆா்.சுபாஷ் தலைமை வகித்தாா்.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையால் கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயா்ந்துள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 300 உயா்ந்துள்ளது. சமையல் எரிவாயு உருளையின் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், உணவுப் பொருள்களின் விலைகள் உயா்தப்பட்டுள்ளன. இதைத் தவிர வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வளா்ச்சி வளா்ச்சி இல்லாமல் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பன உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினா் வழங்கினா்.

ADVERTISEMENT

அரூரை அடுத்த நாசன்கொட்டாய், அரூா் நகா் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினா் மக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதில், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா்கள் சி.வேடியப்பன், பி.டி.ஆறுமுகம், மாவட்டச் செயலா் டி.வேடியப்பன், நிா்வாகிகள் கே.ஆா்.சிவலிங்கம், ஜவகா், புஷ்பலிங்கம், அண்ணாமலை, அருணகிரி, பெரியக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT