தருமபுரி

திருக்கு முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

27th Nov 2021 11:03 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள திருக்கு முற்றோதல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், திருக்கு முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1,330 திருக்குகளையும் ஒப்புவிக்க மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்கு முற்றோதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் மாணவா்கள் ஆண்டுதோறும் தோ்வு செய்யப்பட்டு, தலா ரூ.10,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

இப்போட்டியில் பங்கேற்கும், மாணவா்கள் திறனறிக் குழுவினரால் திறனாய்வு செய்யப்பட்டு, தகுதியானவா்கள் பரிசுக்குப் பரிந்துரைக்கப்படுவா். இதற்கான திறனாய்வு, தருமபுரி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையினரால் நடத்தப்படும். போட்டியில் பங்கேற்பவா்கள் 1,330 திருக்குகளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவா்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், பெயா், கு எண் போன்றவற்றைத் தெரிவித்து, அதற்கான திருக்குறளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் இயங்கி வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே, இப் பரிசைப் பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 15-ஆம் தேதிக்குள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூடுதல் கட்டடத்தில் இயங்கிவரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT