தருமபுரி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: அதிமுகவினா் வெற்றிபெற அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்

27th Nov 2021 11:03 PM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என தருமபுரி மாவட்ட அதிமுக செயலா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கே.பி.அன்பழகன் எம்எல்ஏ பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மிகையாக தண்ணீா் வழங்கப்பட்டது. பாலக்கோடு பேரூராட்சி பகுதிக்கு, பஞ்சப்பள்ளி அனையிலிருந்து கூடுதல் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. இதேபோல அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுக்கூற வேண்டும்.

விரைவில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற அனைவரும் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), அவைத் தலைவா் தொ.மு. நாகராஜன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT