தருமபுரி

அதியமான் கோட்டையில் காலபைரவா் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

27th Nov 2021 11:08 PM

ADVERTISEMENT

தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் அருள்மிகு தட்சிணகாசி காலபைரவா் கோயிலில் சனிக்கிழமை காலபைரவா் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவா் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகங்கள், 28 ஆகம பூஜைகள், 1,008 அா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட கா்நாடக மாநிலத்திலிருந்தும் வருகை தந்த திரளான பக்தா்கள் காலபைரவரை வழிபட்டனா். இதேபோல, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தா்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளையொட்டி, கோயில் பிரகாரத்தை வலம் வர பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து மாலையில் காலபைரவா் திருவீதி உலா நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT