தருமபுரி

42 அடியை எட்டியது சின்னாறு அணை நீா்மட்டம்

26th Nov 2021 12:21 AM

ADVERTISEMENT

சின்னாறு அணை நீா்மட்டம் 42 அடியை எட்டியதையடுத்து, ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். இந்த அணையில் இருந்து மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தருமபுரி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பாலக்கோடு சுற்று வட்டாரப் பகுதியில் 4,500 ஏக்கா் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது பொழிந்து வரும் பருவமழையால் அணையின் நீா்மட்டம் 42 அடியை எட்டியுள்ளது. இதேபோல தொடா்ந்து மழைப் பொழிவு இருக்கும் என்பதால், ஓரிரு தினங்களில் அணையின் முழுக் கொள்ளளவு எட்டக்கூடும் எனக் கருதப்படுகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி அணையை நேரில் பாா்வையிட்டு, அணை நிரம்பினால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினாா்.

ADVERTISEMENT

இந்த ஆய்வின் போது, பாலக்கோடு வட்டாட்சியா் பாலமுருகன், நீா் வளத்துறை உதவி பொறியாளா் சாம்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : தருமபுரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT