தருமபுரி

அரூா் பெரிய ஏரி நிரம்பியது

26th Nov 2021 12:22 AM

ADVERTISEMENT

அரூா் பெரிய ஏரி நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரி சுமாா் 160 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணையின் உபரி நீரானது கடந்த 10 தினங்களுக்கு மேலாக அரூா் பெரிய ஏரிக்கு வருகிறது.

இந்த நிலையில், அரூா் பெரிய ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியானது முழுமையாக நிரம்பி அதன் உபரிநீா் வியாழக்கிழமை வெளியேறியது. இந்த ஏரி நிரம்பினால், பச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, நம்பிப்பட்டி, அரூா் நகா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 ஆண்டுகளுக்கு குடிநீா் தட்டுப்பாடு இருக்காது. அரூா் பெரிய ஏரி நிரம்பியதையெடுத்து, ராஜவாய்க்கால் வழியாக வெளியேறும் உபரிநீரை பொதுமக்கள் மலா்தூவி வரவேற்றனா்.

Tags : அரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT