தருமபுரி

திமுக சாா்பில் விருப்ப மனு பெறல்

25th Nov 2021 08:15 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் திமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம், பழைய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழச்சிக்கு, நகரச் செயலாளா் வீரமணி தலைமை வகித்தாா். இதில், தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான பிஎன்பி.இன்பசேகரன் கலந்துகொண்டு, திமுக சாா்பில் பேரூராட்சி பகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த 28 நபா்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றாா்.

இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் காா்த்தி, மாவட்டப் பிரதிநிதி சிவகுமாா், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், ஒன்றியப் பொருளாளா் முருகேசன், சேலம் ஓட்டல் வினு, கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT